ஜெனரல்
-
data-chart
2014 முதல் இலங்கையின் ஒதுக்குகளில் ஏற்பட்ட மாற்றம்

பெப்ரவரி 2022ல் அறிக்கையிடப்பட்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொ 2,311 மில்லியனாகக் காணப்பட்டன. அதில் 98% (ஐ.அ.டொ 2,242 மில்லியன்) 12 மாதங்களில் முதிர்ச்சியடையக்கூடிய குறுகிய கால பரஸ்பரப் பரிமாற்றங்களைக் கொண்டிருந்தன.

வெளிநாட்டு ஒதுக்குகளை மதிப்பிடும்போது ஒதுக்குகளின் அளவு மற்றும் தரத்திற்கு சம அளவு முக்கியத்துவத்தை வழங்க வேண்டும். அரசப் பிணையங்கள் மீதான பரஸ்பர பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடு  ஆகியவை குறுகிய கால நிதியளிப்பிற்குப் பயனுள்ளதாக அமையும். எனினும் இந்த சாதனங்கள் நிலையற்றதாக இருப்பதால் நீண்ட கால நிலையான ஒதுக்குகளுக்குப் பொருத்தமாக இல்லை. ஒரு சிறப்பான சூழ்நிலையில் எமது ஒதுக்குகளில் அநேகமானவை நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (அல்லது நடைமுறைக் கணக்கு மிகை) போன்ற கடனல்லாத உட்பாய்ச்சல்களைக் கொண்டிருக்க வேண்டும். பரஸ்பர நாணயப் பரிமாற்றங்களை விட நீண்ட கால மீள்கொடுப்பனவைக் கொண்ட நீண்ட கால நிலையான கடன்கள் (உதாரணமாக, நாட்டிற்கான பன்னாட்டு முறிகள்) பரஸ்பர பரிமாற்றல்களுக்குச் சிறந்த மாற்றாக அமையும்.

 

2022-04-05
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்