ஜெனரல்
-
data-chart
தெற்காசிய நாடுகளுக்கிடையே இலங்கையிலேயே அதியுயர் பணவீக்கம் காணப்படுகிறது

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இப்போது விரைவாக அதிகரித்துவரும் பணவீக்கத்தையும் சந்தித்திருக்கிறது. பெப்ரவரி 2022ல் விலைகள் 15.1 சதவீதத்தால் உயர்ந்துள்ளன. இது 13 வருடங்களில் மிக அதிகமாக உள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி 2022ல் மிக அதிகமான பணவீக்க வீதத்தை இலங்கையே பதிவுசெய்துள்ளது.

பல்வேறு காரணங்களால் பணவீக்கம் அதிகரிக்கின்ற போதும் உணவுப் பொருட்களின் விலை பிற துறைகளை விட துரிதமாக அதிகரித்து வருகிறது. உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் பெப்ரவரி 2022ல் 25.7 சதவீதமாக இருந்தது. இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின்படி உணவுப்பொருட்களின் பணவீக்கம் மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் மார்ச் 2022ல் இன்னும் மோசமடைந்துள்ளது. இது முறையே 30.1% மற்றும் 18.7 சதவீமாக உயர்ந்துள்ளன.

2022-04-26
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்