2015 ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள 4 கசினோ தொழில்துறைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ரூ.1 பில்லியன் வீதம் ஒரு தடவை மட்டும் செலுத்த வேண்டிய கசினோ தொழில்துறை அறவீட்டை அரசாங்கம் விதித்தது. இதன் விளைவாக ரூ.4 பில்லியன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்த வேண்டியிருந்தது. எனினும், 2015 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த தொழில்களின் மூலம் ரூ.80 மில்லியன் மட்டுமே சேகரிக்கப்பட்டிருந்தது.
2016 ஆம் ஆண்டில் இந்த தொழில்களின் மூலம் ரூ.400 மில்லியன் மட்டுமே சேகரிக்கப்பட்டிருந்ததாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை மூலம் தெரியவந்தது. மீதமுள்ள ரூ.3.6 பில்லியனை வசூலிப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்தத் தொகை ”நிலுவையிலுள்ள வரியாகவும்” பதிவு செய்யப்படவில்லை.
2019 ஆம் ஆண்டில் அதுவரை காலமும் சேகரிக்கப்பட்ட மொத்த வரி ரூ.1,330 மில்லியன் மட்டும் ஆகும். மீதமுள்ள ரூ.2,670 மில்லியன் வசூலிக்கப்படவில்லை.
2 வருடங்கள் கழித்து 2021 ஆம் ஆண்டில் கூட மொத்தமாக ரூ.2.67 பில்லியன் வரி நிலுவையில் உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்தது. இது வரிகளைச் சேகரிப்பதில் காணப்படும் மெத்தனத்தையும் குறைந்தளவான முன்னேற்றத்தையும் காட்டுகிறது.
Sources: