ஜெனரல்
-
data-chart
NPPயின் சமூக நலன் தொடர்பான வாக்குறுதிகள்

2024 ஆம் ஆண்டுக்கான NPP ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில் இலங்கையில் வலுவற்ற குழுக்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட பல புதிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த பிரஜைகள் ஆகியோரின் நலனை மேம்படுத்துதல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வரவுசெலவு திட்டத்தினால் நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றப்பட வேண்டிய தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில் உள்ள சில முக்கிய வாக்குறுதிகள் இதோ:

  1. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரூ. 10,000 தொடக்கம் அதற்கு அதிகமான மாதாந்த நிதி மானியம் வழங்குதல்
  2. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 10,000 மாதாந்த நிதி உதவித் தொகை வழங்குதல்.
  3. தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைகளின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ. 10,000 மாதாந்த நிதி மானியம் வழங்குதல்.
  4. உதவி தேவைப்படும் மூத்த பிரஜைகளுக்கு ரூ. 5,000 மாதாந்த உதவித்தொகை வழங்குதல்.
  5. மாற்றுத்திறனாளிகளுக்கான இலாப நோக்கற்ற பராமரிப்பு சேவை நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குதல்.
  6. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உதவி சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு வரி விலக்குகளை வழங்குதல்.
  7. மூத்த பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைகளுக்கு சாதாரண வங்கி விகிதத்தை விட 5% அதிக வட்டி வீதம் வழங்குதல்.
  8. தேவைகள் மற்றும் வருமான நிலைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தனிநபர்கள்; பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் மற்றும் பாலின அடிப்படையிலான/நெருக்கமான துணையின் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி உதவி.
  9. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் முதல் ஆண்டிலும் சத்தான உணவுப் பொதிகளுக்கு நிதி உதவி வழங்குதல்.
  10. அனைத்து மூத்த பிரஜைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் காப்புறுதித் திட்டத்தை செயற்படுத்துவதற்கு ஒரு நிதியை நிறுவுதல்.
  11. மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சுயதொழில் செய்வதற்கான நிதி உதவியை விரிவுபடுத்துதல்.
  12. சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறி வழங்கப்படும் நுண்நிதி கடன்களை மதிப்பாய்வு செய்த பிறகு, பின்தங்கிய தரப்பினருக்கு நிவாரணம் வழங்குதல்.
  13. கல்வி, சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சிறுவர் நலன் சார் துறைகள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளுக்கு வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டை அதிகரித்தல், ஒதுக்கப்பட்ட மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்.
  14. தேவைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் பொது மற்றும் தனியார் கூட்டாண்மைகளுடன் கிராம சேவகர் மட்டத்தினாலான குழந்தை பராமரிப்பு மையங்களை நிறுவுதல்.
  15. பிரதேச செயலக மட்டத்தினாலான புதிய முதியோர் பராமரிப்பு மையங்களை நிறுவுதல்.
  16. தனியார் பராமரிப்பு மையங்களை அரசு ஆதரித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதில் அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் ஏற்ற முறையில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களை மாற்றியமைத்தல்.
 

மூலம்:

NPP ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை 2024 https://www.akd.lk/policy/ இல் [இறுதியாக அணுகப்பட்டது 11 பெப்ரவரி 2025]

2025-02-12
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்