கல்வித் துறையில் தற்போதுள்ள பிரச்சினைகளை (அதிக இடைநிற்றல் விகிதங்கள், சமத்துவமின்மை மற்றும் குறைந்த விலை) போன்றவற்றை தீர்ப்பதற்கும் அதன் மேம்பாட்டிற்கும், ஜனாதிபதி தனது தேர்தல் அறிக்கையில் பல புதிய வாக்குறுதிகளை அளித்தார்.
இவ்வாக்குறுதிகளில் பலவற்றை செயற்படுத்துவதற்கு, தேசிய வரவுசெலவுத் திட்டத்திலிருந்து நிதி அவசியமாகிறது.
வரவுசெலவுத் திட்ட நிதி தேவைப்படும், தேர்தல் அறிக்கையில் இருந்தான சில முக்கிய வாக்குறுதிகள் இதோ:
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கல்விக்கான ஒதுக்கீட்டை படிப்படியாக 6% ஆக உயர்த்துதல்.
- அனைத்து தொழில்நுட்ப மற்றும் பௌதீக வசதிகளுடன் கூடிய தேசிய தேர்வு மதிப்பீட்டு மையம் ஒன்றை நிறுவுதல்.
- தேசிய கல்வி நிறுவனத்திற்குள் பாடத்திட்ட மேம்பாட்டிற்காக முழுமையாக பொருத்தப்பட்ட பாடத்திட்ட மேம்பாட்டு அலகை உருவாக்குதல்.
- அனைத்து கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை இணைத்து கல்விக்கான தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுதல்.
- உலகின் உயர்மட்டத்திற்கு தரப்படுத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர உயர்நிலைப் பாடசாலைப் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு 200 புலமைப் பரிசில்கள் வழங்குதல்.
- வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு மஹபொல மற்றும் மாணவர் உதவிக் கொடுப்பனவினை அதிகரித்தல்.
- முதுகலை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குதல்
- செவிலியர் பாடசாலைகளை ஒரு தேசிய செவிலியர் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு இணைத்தல்