அண்டைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையர்கள் 2.5 முதல் 3 மடங்கு அதிக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துகின்றனர்
2023 ஆம் ஆண்டில் பெப்ரவரி, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் இலங்கை அதன் மின்சாரக் கட்டணங்களை மூன்று முறை திருத்தியமைத்தது. மின்சாரம் வழங்குவதற்கான முழுச் செலவையும் மீளப் பெறுவதே இந்த அதிகரிப்புக்குக் கூறப்பட்ட அடிப்படையாகும். 2023 டிசம்பரில் இலங்கையின் வீட்டு மின் கட்டணங்களை ஏனைய தெற்காசிய நாடுகளிலுள்ள குடும்பங்கள் செலுத்தும் கட்டணங்களுடன் இப்பகுப்பாய்வு ஒப்பிடுகிறது.
இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் குறித்த பொதுமக்களின் கவலையை நியாயப்படுத்தும் இரண்டு கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன:
2024 பெப்ரவரியில் கட்டணக் குறைப்பு திட்டமிடப்பட்டுள்ளது; இதன் விளைவாக மின்சாரக் கட்டணத்தில் சுமார் 4% அல்லது அதை விட மேலும் செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், தெற்காசியாவில் உள்ள குடும்பங்கள் செலுத்தும் தொகையை விட 2.5 முதல் 3 மடங்கு அதிக கட்டணத்தை, அதாவது இப்பிராந்தியத்தில் மின்சாரத்திற்கான அதிகூடிய கட்டணத்தைச் செலுத்தும் நிலையில் இலங்கை உள்ளதால், இக்கட்டணக் குறைப்பு குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
ஒற்றைக் கட்ட மின் வழங்கீட்டில் (மின்சாரம் மீதான எந்தவொரு அரசாங்க வரியையும் தவிர்த்து) மாதத்திற்கு 100 முதல் 300 அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளை ஒப்பிடுவதன் அடிப்படையில் இந்தப் பகுப்பாய்வு அமைந்துள்ளது. இலங்கையில் 100 அலகுகளைப் பயன்படுத்துவதற்கு ரூ.5,280 செலவாகும், அதேவேளை தெற்காசிய நாடுகளுக்கான சராசரி ரூ.2,078க்குச் சமம் என்று அட்டவணை 2 காட்டுகிறது. இலங்கையில் 300 அலகுகளைப் பயன்படுத்துவதற்கு ரூ.21,860 செலவாகும், அதேவேளை தெற்காசிய நாடுகளுக்கான சராசரி ரூ.7,340க்குச் சமமாகும்.
அட்டவணை 1:
அட்டவணை 2: தெற்காசியாவின் சராசரி மின் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் மின் கட்டணங்கள்
ஜனவரி 1, 2024க்கு மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது |
100 அலகுகள் |
200 அலகுகள் |
300 அலகுகள் |
|
இலங்கையில் உள்ள குடும்பங்களுக்கு (இலங்கை ரூபாய்) |
5,280.0 |
12,960.0 |
21,860.0 |
|
ஏனைய தெற்காசிய குடும்பங்களுக்கான சராசரி மின் கட்டணம் (இலங்கை ரூபாய்க்குச் சமமாக) |
2,077.9 |
4,609.2 |
7,340.4 |
|
தெற்காசியாவின் ஏனைய நாடுகளின் சராசரி செலவுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் மின் கட்டணம் |
சதவீதமாக |
254% |
281% |
298% |
செலவின் மடங்காக |
2.5 |
2.8 |
3.0 |
குறிப்பு: இந்த நாடுகளின் அந்தந்த மின்சார சபைகளிடம் இருந்து பெறப்பட்ட மின் கட்டண வரம்புகள் செலவு கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன | மாநில அடிப்படையிலான கட்டணங்களைக் கொண்ட நாடுகளுக்கு, அதிக விகிதத்தைக் கொண்ட மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது | நாணயங்கள் 2023 டிசம்பர் இறுதியில் காணப்பட்ட உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன | இந்தக் கணக்கீடுகளில் மின்சாரம் மீதான அரசு வரிகள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை | மூலங்கள் மேலதிகக் குறிப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன.
மூலங்கள்:
கணக்கீடு காபூலின் கட்டணங்களை அடிப்படையாகக் கொண்டது, ஏனெனில் அந்நாட்டின் மாநில அடிப்படையிலான கட்டமைப்பிற்குக் கிடைக்கக்கூடிய ஒரே தரவு இதுவாகும் |
|
அவர்களின் தேசிய கட்டண அமைப்புகளின் அடிப்படையில் |
|
அவர்களின் தேசிய கட்டண அமைப்புகளின் அடிப்படையில் |
|
மகாராஷ்டிராவின் கட்டண அமைப்பு கணக்கில் கொள்ளப்படுகிறது, மாநிலங்கள்/நகரங்கள் தொடர்பில் கிடைக்கக்கூடிய தரவுகளில் அதிக விகிதத்தை இது கொண்டுள்ளது. |
|
கிரேட்டர் மாலே பிராந்தியத்திற்கான கட்டண விகிதங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது |
|
தேசிய கட்டண அமைப்புகளில் மிக உயர்ந்த ஆம்பியர் விகிதம் (60 ஆம்பியர்) பயன்படுத்தப்பட்டுள்ளது |
|
கராச்சியின் கட்டண அமைப்பு கணக்கில் கொள்ளப்படுகிறது, மாநிலங்கள்/நகரங்கள் தொடர்பில் கிடைக்கக்கூடிய தரவுகளில் அதிக விகிதத்தை இது கொண்டுள்ளது |
|
2023 டிசம்பர் நிலவரப்படி தேசிய கட்டண அமைப்பு மற்றும் 2024 பெப்ரவரிக்கு முன்மொழியப்பட்ட குறைக்கப்படவிருக்கும் கட்டண அமைப்பின் அடிப்படையில் |
|
மின்சாரக் கட்டணங்கள் அந்தந்த நாட்டின் உள்ளூர் நாணயத்தில் கணக்கிடப்பட்டு, பின்னர் 2023 டிசம்பர் இறுதியில் அமெரிக்க திறைசேரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களைப் பயன்படுத்தி அமெரிக்க டொலராக மாற்றப்பட்டு, பின்னர் இலங்கையுடன் ஒப்பிடுவதற்காக இலங்கை ரூபாயாக மாற்றப்பட்டது. |