ஜெனரல்
-
data-chart
2022ல் முன்வைக்கப்பட்ட நெருக்கடி நிலைக் கொள்கைகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பற்றிய மதிப்பீடு
முன்மொழியப்பட்ட நெருக்கடி நிலைக் கொள்கைகளை அரசாங்கம் எவ்வளவு சிறப்பாகச் செயற்படுத்தியுள்ளது? இலங்கையின் நீண்டகால பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக - அரசியல் கொந்தளிப்பு அதன் பிரஜைகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நெருக்கடியை வரையறுக்கும் மூன்று பண்புகள்: அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களுக்கான கடுமையான பற்றாக்குறை, அதிகரிக்கும் உணவுப் பணவீக்கம் மற்றும் பல மாதங்களாக போக்குவரத்தை முற்றாக ஸ்தம்பிக்கச் செய்த எரிபொருள் பற்றாக்குறை. இந்தச் சூழலில், 2022ன் முதல் அரையாண்டில் இந்த மூன்று பிரச்சனைகளையும் சமாளிக்க அரசாங்கம் முன்மொழிந்த கொள்கைகளை அது எவ்வளவு சிறப்பாக செயற்படுத்தியுள்ளது என்பதை வெரிட்டே ரிசேர்ச் மதிப்பிடுகிறது. இதன் நோக்கங்கள் (1) அரசாங்கத் தீர்மானங்களின் வெளிப்படைத்தன்மையையும் அவை நிறைவேற்றப்படுவதையும் மேம்படுத்துதல் (2) அரசாங்கத்தையும் அதிகாரத்துவத்தையும் பொறுப்புக்கூறச் செய்தல்.
ஆன்-பேஜ் PDF பார்வையாளர்