2022 இல் இலங்கை தனது வரி வருமான இலக்கை ரூபா 101 பில்லியன் குறைந்த நிலையில் தவறவிட்டது. தற்போதைய IMF திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளித்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொடர்ச்சியான வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறைகள், அதிகப்படியான கடன் வாங்குதல் மற்றும் மோசமான கடன் முகாமை ஆகியவை 2021 இல் தொடங்கிய பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுத்தன. இந்த விளக்கப்படம் அரச வரி வருமானத்தின் பாகுபாட்டை, அதன் திருத்தப்பட்ட மதிப்பீடு மற்றும் அதன் உண்மையான புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறது. மதுபானம் மீதான கலால் வரிகள் மற்றும் பெறுமதி சேர் வரி போன்றவை வரி வருமானத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கு அதிக பங்களித்தன.
உங்கள் கருத்துகள் அல்லது கேள்விகளை கீழே பதிவு செய்யுங்கள்.
எங்கள் மாதாந்த செய்திமடலைப் பெற விரும்பினால், உங்கள் மின்னஞ்சல் முகவரி உட்பட 'RQNL' என்று ஒரு கருத்தை பதிவிடவும்.