2024 ஆம் ஆண்டுக்கான NPPயின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையானது, விவசாயத் துறையில் தற்போதுள்ள சவால்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட பல புதிய வாக்குறுதிகளை கோடிட்டுக் காட்டுகிறது. இதில், குறைந்த உற்பத்தித்திறன், அதிக செலவுகள் மற்றும் முக்கிய ஏற்றுமதிப் பயிர்களின் சரிவு ஆகியவை அடங்கும். நவீன தொழில்நுட்பங்களை உற்பத்திக்காக ஈடுபடுத்துவதோடு, மேம்படுத்தப்பட்ட கொள்கைக் கட்டமைப்புக்கள் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் விவசாயிகளுக்கு அதிகரித்த ஆதரவு வழங்குதலை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்த விவசாயம் தொடர்பான வாக்குறுதிகளில் பலவற்றை திறம்பட செயல்படுத்த வேண்டுமாயின், தேசிய வரவுசெலவுத் திட்டம் மூலம் நிதி அவசியமாகிறது.
விவசாயம் தொடர்பான வாக்குறுதிகளின் முழுமையான பட்டியல் இதோ,
- பொது-தனியார்-மக்கள் கூட்டுத் திட்டங்களாக விவசாயப் பொருட்களுக்கான சேமிப்பு, குளிர்பதன சேமிப்புக் கிடங்கு மற்றும் பதப்படுத்தும் அலகுகளை நிறுவுதல்.
- Aவிவசாயிகளுக்கான முறையான ஒரு விவசாய காப்புறுதி முறை.
- கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் கரும்பு விளைச்சலை மேம்படுத்துதல்.
- ஐந்து ஆண்டுகளுக்குள் 50,000 விவசாய தொழில்முனைவோரை நிறுவுவதற்கு நிதி உதவி வழங்குதல்.
- இறப்பர் தோட்டங்களுக்கு மழைக்காடுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தற்போது அறுவடைக்குப் பயன்படுத்தப்படாத இறப்பர் நிலங்களைக் கண்டறிந்து அவற்றை இறப்பர் அறுவடைக்கு மீண்டும் பயன்படுத்துவதற்கான நிதி வசதிகள்.
- நுண் நீர்ப்பாசனத்துடன் அதிக விளைச்சல் தரும் அரை வற்றாத அல்லது வற்றாத பயிர்களை பயிரிடுவதற்கு ஹெக்டேயருக்கு ரூ. 1 மில்லியன் வரை கடன் வசதிகளை வழங்குதல்.
- விவசாய விரிவாக்க அதிகாரிகளுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைகளை வழங்குதல்.
- குறைந்த வருமானம் கொண்ட பெண்களை வலுவூட்டுவதற்கு 7,500 பால் பண்ணைகளை நிறுவுதல்.
- இளைஞர் தொழில்முனைவோரை வலுப்படுத்துவதற்கு 7,500 பால் பண்ணைகளை நிறுவுதல்.
- பதிவுசெய்யப்பட்ட கறவை மாடுகளுக்கு சுகாதார காப்புறுதித் திட்டத்தை வழங்குதல்.
- முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்காக கால்நடைகள் மற்றும் பிற மூலப்பொருட்களுக்கு வரி நிவாரணம் வழங்குதல்.
- குறைந்த வருமானம் கொண்ட பெண்களை வலுவூட்டுவதற்கு 5,000 சிறிய அளவிலான கோழி பண்ணைகளை நிறுவுதல்.
- மீன்பிடி மற்றும் சந்தை நடவடிக்கைகள் குறித்த ஆராய்ச்சியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஒரு நிதி.
- உற்பத்தி செலவைக் குறைப்பதன் மூலம் சரிந்த மீன்வளத்தை மேம்படுத்துவதற்காக மீன்பிடி சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குதல்.
- ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கு பிராந்திய சேகரிப்பு மையங்களை அமைத்தல்.
- மீன்பிடி சமூகத்தின் குடும்பங்கள், தொழிலில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் கருவிகளை உள்ளடக்கிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.
- மீனவர் ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல்.
- போதுமான உள்நாட்டு உற்பத்தி உருவாக்கப்படும் வரை இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளுக்கு வரி நிவாரணம் வழங்குதல்.