2023 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் படி, 2023 ஆம் ஆண்டில் மொத்த மீண்டெழும் செலவினங்களில் 15%, அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படும்.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, பாதுகாப்புத் துறையானது அரச சம்பளங்களில் கிட்டத்தட்ட பாதியை (48%) கோரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான அரச சம்பளங்களின் மதிப்பிடப்பட்ட துறை வாரியான ஒதுக்கீடுகளின் பாகுபாடு இங்கே தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறையிலும் உள்ள அமைச்சுக்களின் விரிவான அமைப்பு மற்றும் அவற்றின் மதிப்பிடப்பட்ட அரச சம்பள செலவை மொத்த செலவின் சதவீதமாகக் கண்டறிய கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.
துறை |
அமைச்சு |
மொத்த அரசாங்க சம்பள செலவினத்தின் சதவீதமாக (%) |
நலன்புரி மற்றும் சமூக சேவைகள் |
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு |
0.50% |
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு |
3.17% |
|
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு |
0.17% |
|
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல |
வெகுசன ஊடக அமைச்சு |
2.40% |
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு |
1.77% |
|
ஏனைய மத்திய அரசு |
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு |
1.64% |
விசேட செலவின அலகுகள் |
0.99% |
|
உள்ளூராட்சி மற்றும் மாகாண அரசு |
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு |
6.09% |
நீதி |
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு |
2.11% |
சுகாதாரம் |
சுகாதார அமைச்சு |
16.81% |
நிதி |
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு |
1.41% |
கல்வி |
கல்வி அமைச்சு |
8.45% |
பாதுகாப்பு |
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு |
11.88% |
பாதுகாப்பு அமைச்சு |
36.75% |
|
விவசாயம் |
கமத்தொழில் அமைச்சு |
2.40% |
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு |
0.25% |
|
மின்சக்தி மற்றும் வலுசக்தி |
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு |
0.03% |
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு |
0.02% |
|
சுற்றுலா |
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு |
0.90% |
கைத்தொழில |
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு |
0.09% |
கைத்தொழில் அமைச்சு |
0.12% |
|
கடற்றொழில் அமைச்சு |
0.11% |
|
தொழில்நுட்ப அமைச்சு |
0.01% |
|
நீர் வழங்கல் மற்றும் துப்பரவு |
நீர் வழங்கல் அமைச்சு |
0.06% |
நீர்ப்பாசன அமைச்சு |
0.55% |
|
நகர அபிவிருத்தி |
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு |
0.25% |
வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு |
0.49% |
|
முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு |
0.03% |
|
சுற்றாடல் அமைச்சு |
0.07% |
|
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு |
0.49% |
பாதுகாப்பு அமைச்சின் ஏனையவை எனும் பிரிவு பாதுகாப்பு அமைச்சின் (முப்படைகளைத் தவிர்த்து) தனிப்பட்ட ஊதியங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றை உள்ளடக்கியது. 2023 வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டின் படி, தனிப்பட்ட ஊதியங்களினுள் சம்பளம் மற்றும் படிகளில் - தனிப்பட்ட ஊதியங்கள், மேலதிக நேரம், விடுமுறை கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் ஆகியவை அடங்கும்.