இலங்கையில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) தடுக்கும் ஒரு முக்கியமான தடையாக காணி அணுகல் அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலீட்டு வலயங்கள், முதன்மை ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் (EPZ) அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் கணிசமாக செல்வாக்கு செலுத்துகின்றன, இருப்பினும், இலங்கையின் EPZ கள் தற்போது முழு திறனை நெருங்கி வருகின்றன.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக பல வரவுசெலவுத் திட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், கொடுக்கப்பட்ட முன்மொழிவுகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, மேலும் இந்த பிரச்சினை நீடித்து வருவதாகக் காணப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில், "புதிய பொருளாதார வலய வேலைத்திட்டம்" என்ற வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு 0.3 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டுடன் சமர்ப்பிக்கப்பட்டது, இருப்பினும், இந்த பிரேரணையின் முன்னேற்றம் மற்றும் அமுலாக்கம் பற்றிய எந்த தகவலும் இதுவரை இலங்கை அரசாங்கத்தால் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை, இதனால் அத்தகைய கவலைகள் வலுவூட்டப்படுகிறது.
2023 வரவுசெலவுத் திட்ட உரையில் அடுத்த 10 ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது, எவ்வாறாயினும், முதலீட்டுக்கு போதுமான காணிகள் இல்லாமல் இலங்கை இதை அடைய முடியுமா, வாக்குறுதியளிக்கப்பட்ட காணிகள் மற்றும் உள்கட்டமைப்பு இறுதியாக எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாகவும் குறிப்பிடத்தக்க கேள்விகள் எழுப்பப்படுகின்றன.