ஜெனரல்
-
data-chart
நிறைவேற்றப்பட வேண்டிய மொத்த உறுதிமொழிகளின் எண்ணிக்கை 110 ஆகும் அதில் 62 ஐ 2024 மார்ச் மாதத்திற்க்குள் நிறைவேற்றப்பட வேண்டும்

சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) 2023  மார்ச் மாத்தில் ஆரம்பிக்கப்பட்ட தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் முதல் கட்டமான ‘முதல் தவணை’யில் இலங்கையின் செயலாற்றுகை குறித்த தனது மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.

 

'விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் விரிவாக்கப்பட்ட ஏற்பாட்டின் கீழான முதல் மதிப்பாய்வு' என்ற தலைப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டில் உள்ள அனைத்து தகவல்களின் அடிப்படையிலும், வெரிட்டே ரிசர்ச் தனது 'IMF கண்காணிப்பானை' புதுப்பித்துள்ளது. 2023 நவம்பர் மாத இறுதிக்குள்  நிறைவேற்றப்பட வேண்டிய 73 உறுதிமொழிகளில் 60 ஐ இலங்கை 'நிறைவேற்றியுள்ளது' (சிறு தாமதத்துடன்).

 

மீதமுள்ள 13 உறுதிமொழிகளும் 'நிறைவேற்றப்படவில்லை'. குறித்த 13 உறுதிமொழிகளிலும், எட்டு உறுதிமொழிகள் இரண்டாம் தவனைக்கு அல்லது இரண்டாம் மதிப்பாய்வு செய்யப்படும் காலப்பகுதிக்கு முன்கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஐந்து உறுதிமொழிகள், மீள முடியாதபடி 'நிறைவேற்றப்படவில்லை' எனவே அவை முன்கொண்டு செல்லப்பட மாட்டாது.

இரண்டாம் தவணைக்கான மேலதிக உறுதிமொழிகள்

சர்வதேச நாணய நிதியம் நவம்பர் மாத இறுதிக்குப் பின்னர் வழங்கப்படவிருந்த 27 உறுதிமொழிகளின் காலக்கெடுவை இப்போது மாற்றியமைத்துள்ளது அல்லது நீட்டித்துள்ளது. இவை IMF கண்காணிப்பானில் 'நிலுவையில் உள்ளவை' என வகைப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட்ட எட்டு உறுதிமொழிகளும் உள்ளன.

இந்த 35 (27 + 8) உறுதிமொழிகளுக்கு மேலதிகமாக, இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் 75 புதிய உறுதிமொழிகளை நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்த்துள்ளன.  எனவே, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் 110 உறுதிமொழிகள் 'நிலுவையில் உள்ள' நிலையில், இரண்டாவது தவணை ஆரம்பமாகியுள்ளது.

ஆளுகை மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான உறுதிமொழிகள்

முதல் மதிப்பாய்வு ஜூன் மாதத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டிய உறுதிமொழிகளில் கவனம் செலுத்தியது. ஆயினும்கூட, ஆளுகை மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான நான்கு உறுதிப்பாடுகள் நவம்பர் இறுதிக்குள் கூட 'நிறைவேற்றப்படவில்லை'.

 

இவற்றில் முதன்மையானதாக 1) பொது கொள்முதல் மற்றும் வரி விலக்குகள் தொடர்பான இணையவழி வெளிப்படைத்தன்மை தளத்தைத் ஆரம்பித்தல் மற்றும் 2) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின்  பணிப்பாளர்களுக்கான வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான தெரிவு செயல்முறையை நிறுவுதல் (CIABOC).

IMF கண்காணிப்பான் என்பது இலங்கையின் 17 வது சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் தொடக்கத்தில் இனங்காணப்பட்ட 100 உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் இலங்கையின் முதல் மற்றும் ஒரே தளமாகும். இதை வெரிட்டே ரிசர்ச்சின்   manthri.lk இணையதளத்தினூடாக பொதுமக்கள் அணுகலாம். https://manthri.lk/en/imf_tracker

2024-01-29
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்