-
அரசாங்கம் தொடர்ச்சியாக தனது வருமானத்தை மிகை மதிப்பிட்டு வந்துள்ளது. ஆரம்ப மதிப்பீடான ரூ.2,019 பில்லியனை பின்னர் 22.9 சதவீதத்தால் குறைத்து ரூ.1,556 என அரசாங்கம் மீளத்திருத்தியது. 2021 வரவு செலவுத்திட்டம் மீதான வெரிட்டேயின் பொது அறிக்கையில், அரசாங்கத்தின் வருமானம் ரூ.1,523 பில்லியன் என வெரிட்டே மதிப்பிட்டிருந்தது.
2022 வரவு செலவுத்திட்டம் மீதான வெரிட்டேயின் பொது அறிக்கையில், 2022ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வருமானமும் மிகை மதிப்பிடப்பட்டுள்ளதுடன் அது ரூ.1,890 பில்லியன் என மீளத்திருத்தப்பட வேண்டும் என அவதானித்துள்ளது.