-
நொவம்பர் 2021ல் அரசாங்கம் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளை வெளியிட்டதுடன் வரவு செலவுத்திட்ட உரையையும் அதே நாளில் சமர்ப்பித்தது. எனினும், இந்த இரண்டு ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் வருமானம், செலவினம் மற்றும் பற்றாக்குறை ஆகியவற்றுக்கான பெறுமதிகள் வெவ்வேறாக உள்ளன. இது வரவு செலவுத்திட்டப் பெறுமதிகளின் நம்பகத்தன்மையைக் குறைப்பதுடன் எது சரியான பெறுமதி என்ற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் தயார் செய்ததன் பின்னர் புதிய முன்மொழிவுகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் எனக் கருதி, வரவு செலவுத்திட்ட உரையின் பின்னிணைப்பு III மற்றும் IVல் வழங்கப்பட்டுள்ள வருமான மற்றும் செலவின முன்மொழிவுகளை வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டுப் பெறுமதியில் சேர்த்தாலும் கூட பெறுமதிகள் வேறுபடுகின்றன.