2019 மற்றும் 2020 காலகட்டத்தில் இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 2019 ல் ரூபா 1,016 பில்லியனில் இருந்து 2020 ல் ரூபா 200 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது ரூபா 1,074 பில்லியன் எனும் அதிகரிப்பு ஆகும். வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையின் அதிகரிப்புக்கு ரூபா 526 பில்லியன் வருமான வீழ்ச்சி மற்றும் ரூபா 548 பில்லியன் செலவின அதிகரிப்பு என்பன காரணமாக இருக்கலாம்.
அரச வருமானத்தில் வீழ்ச்சி
அரச வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட முக்கிய காரணம், பெறுமதி சேர் வரி (ரூபா 210 பில்லியன்), மோட்டார் வாகனத்தின் மீதான உற்பத்தி வரி (ரூபா 82 பில்லியன்), தேச கட்டுமான வரி (ரூபா 68 பில்லியன்) நிறுவன வருமான வரி (ரூபா 46 பில்லியன்), நிறுத்தி வைத்தல் வரி (ரூபா 40 பில்லியன்), பொருளாதார சேவை கட்டணம் (ரூபா 40 பில்லியன்) மற்றும் உழைக்கும் போதே செலுத்தும் வரி (ரூபா 34 பில்லியன்)போன்ற வரிகளின் சேகரிப்பில் ஏற்பட்ட குறைவே ஆகும். இருப்பினும், சிறப்பு பண்டைத் தீர்வை (ரூபா 12 பில்லியன்) மற்றும் இறக்குமதித் தீர்வைகள் (ரூபா16 பில்லியன்) ஆகியவற்றிலிருந்தான வரி வருமானத்தில் மிதமான அதிகரிப்பு இருந்துள்ளது. வருமான மாற்றங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் பின்வருமாறு, (அட்டவணையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது)
2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வருமான வீழ்ச்சிக்கு பங்களித்த பல முக்கிய வரி கொள்கை மாற்றங்களும் இருந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கிய வரி கொள்கை மாற்றங்களாவன:
மேலும், 2020 ஏப்ரல் மாதம் முதல் பெரும்பாலான மோட்டார் வாகன இறக்குமதிகளை அரசாங்கம் தடைசெய்தது, இது மோட்டார் வாகனங்களுக்கான உற்பத்தி வரியை கணிசமாகக் குறைக்க வழிவகுத்தது.
அரச செலவினங்களில் அதிகரிப்பு
அரச செலவினங்களிலான அதிகரிப்பு முக்கியமாக; மூலதனச் செலவினம் (ரூபா 176 பில்லியன்), மாற்றல் கொடுப்பனவுகள் (ரூபா 166 பில்லியன்), சம்பளங்களும் படிகளும் (ரூபா 108 பில்லியன்) மற்றும் வட்டி கொடுப்பனவுகள் (ரூபா 79 பில்லியன்) போன்ற செலவினங்களில் ஏற்பட்ட அதிகரிப்பாகும். செலவின மாற்றங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் பின்வருமாறு, (அட்டவணையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது)
2020 நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021 வரவு செலவுத் திட்டத்தில், சமுர்த்தி மாநில அமைச்சின் ஊடாக கோவிட் -19 நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அரசாங்கமானது ரூபா 35 பில்லியனை ஒதுக்கீடு செய்தது. மேலும், அரசினால் மேற்கொள்ளப்பட்ட்ட 160, 000 திறனற்ற ஊழியர்கள் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகளின் நியமனமானது ஆண்டொன்றுக்கு ரூபா 65 பில்லியன் எனும் மேலதிக செலவினங்களை ஏற்படுத்தியது.
(பார்க்கவும், https://publicfinance.lk/en/topics/New-Government-Recruitment-Schemes:-An-increased-burden-on-taxpayers-1620677894)
குறிப்பு:2020 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையின் படி 2020 மற்றும் 2019 க்கான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை புள்ளிவிவரங்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன, ஏனெனில் மத்திய வங்கியின் எண்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒத்துப்போகவில்லை, எனவே அவற்றை பல ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பயன்படுத்த முடியாது. இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு எங்கள் முந்தைய விளக்கங்களை பார்க்கவும் https://publicfinance.lk/en/topics/2020-Records-the-Highest-Budget-Deficit-Since-1982-1620901757
*அரச வருமானத்தை விட அரச செலவினம் அதிகமாக இருக்கும் போது வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
மூலம்: ஆண்டறிக்கை (2020), இலங்கை மத்திய வங்கி
அட்டவணை 2: அரச செலவினம் (2019 மற்றும் 2020)
பெறுமதிகள் ரூபா மில்லியனில்
பிரிவு |
2019 |
2020 தற்காலிகமானது |
Decline in 2020 |
வரி வருமானம் |
1,734,925 |
1,216,542 |
518,383 |
வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதான வரிகள் |
280,965 |
312,334 |
-31,369 |
இறக்குமதிகள் |
98,427 |
114,183 |
-15,756 |
இறக்குமதி தீர்வை (மொத்த) |
98,427 |
114,183 |
-15,756 |
குறைவான தீர்வை தள்ளுபடி |
- |
- |
- |
PAL/RIDL/SCL/ஏனையவை |
182,538 |
198,151 |
-15,613 |
உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள் |
843,355 |
555,718 |
287,637 |
GST/VAT |
443,877 |
233,786 |
|
உள்நாட்டு GST/VAT |
273,963 |
148,061 |
125,902 |
இறக்குமதிகள் மீதான GST/VAT |
169,914 |
85,725 |
84,189 |
உற்பத்தி வரி |
399,478 |
321,932 |
77,546 |
மதுபானம் மீதான உற்பத்தி வரி |
115,443 |
120,990 |
-5,547 |
சிகரெட், புகையிலை மீதான உற்பத்தி வரி |
87,367 |
94,345 |
-6,978 |
பெற்றோலியம் மீதான உற்பத்தி வரி |
61,740 |
53,111 |
8,629 |
MV மற்றும் ஏனையவை மீதான உற்பத்தி வரி |
134, |
53,486 |
81,441 |
தேசிய பாதுகாப்புக் கட்டணம் |
- |
- |
- |
அனுமதிப்பத்திர கட்டணம் |
n/a |
n/a |
n/a |
தேறிய வருமானம் மற்றும் இலாபங்கள் மீதான வரிகள் |
427,700 |
268,249 |
159,451 |
நிறுவனம் |
261,089 |
214,819 |
46,270 |
நிறுவனமல்லா |
11,514 |
13,517 |
-2,003 |
வட்டி மீதான வரி |
50,351 |
9,989 |
40,362 |
மூலதன இலாப வரி |
n/a |
n/a |
n/a |
முத்திரை வரி/ செஸ் தீர்வை/ SRL/NBT/DL/TL |
182,905 |
80,241 |
102,664 |
பற்று வரி |
- |
|
- |
வறியற்ற வருமானம் |
155,974 |
151,417 |
4,557 |
நடைமுறை வருமானம் |
155,974 |
151,417 |
4,557 |
ஆதன வருமானம் |
46,404 |
60,984 |
-14,580 |
வாடகை |
4,727 |
12,055 |
-7,328 |
வட்டி |
13,819 |
7,297 |
6,522 |
இலாபங்கள், பங்கிலாபங்கள் |
27,857 |
17,624 |
10,233 |
தேசிய லொத்தர் |
n/a |
n/a |
n/a |
மத்திய வங்கி வருமான மாற்றல்கள் |
- |
24,009 |
24,009 |
சமூகப் பாதுகாப்பு அன்பளிப்புகள் |
28,985 |
32,417 |
-3,432 |
கட்டணம் மற்றும் நிர்வாக அறவீடுகள் |
73,884 |
47,370 |
26,514 |
ஏனையவை |
6,701 |
10,646 |
-3,945 |
மூலதன வருமானம் |
- |
- |
- |
மொத்த வருமானம் |
1,890,899 |
1,367,960 |
522,939 |
மானியங்கள் |
7,909 |
5,348 |
2,561 |
மொத்த வருமானம் |
1,898,808 |
1,373,308 |
525,500 |
அட்டவணை 2: அரச செலவினம் (2019 மற்றும் 2020)
பெறுமதிகள் ரூபா மில்லியனில்
வருடம் |
2019 |
2020 |
Increase in 2020 |
மீண்டெழும் செலலினம் |
2,424,582 |
2,671,786 |
247,204 |
பொருட்கள் சேவைகள் மீதான செலவினம் |
848,278 |
974,351 |
126,073 |
சம்பளங்களும் வேதனாதிகளும் |
686,452 |
794,158 |
107,706 |
சிவில் நிர்வாகம் |
420,300 |
509,555 |
89,255 |
தேசிய பாதுகாப்பு |
266,152 |
284,603 |
18,451 |
பிற பொருட்கள் மற்றும் சேவைக் கொள்வனவு |
161,826 |
180,193 |
18,367 |
சிவில் நிர்வாகம் |
82,489 |
100,006 |
17,517 |
தேசிய பாதுகாப்பு |
79,338 |
80,187 |
849 |
செலவினங்களுக்கான ஒதுக்கீடு |
- |
- |
- |
வட்டிக் கொடுப்பனவுகள் |
901,353 |
980,302 |
78,949 |
வெளிநாட்டு |
233,970 |
266,679 |
32,709 |
உள்நாட்டு |
667,383 |
713,623 |
46,240 |
மாற்றல் கொடுப்பனவுகள் |
551,524 |
717,133 |
165,609 |
குடித்தனம் |
456,241 |
610,486 |
154,245 |
உப தேசிய அரசாங்கங்கள் |
- |
- |
- |
நிதிசாரா பொது தொழில்முயற்சிகள் |
26,153 |
17,712 |
-8,441 |
நிறுவனங்கள் மற்றும் பிற |
69,130 |
88,936 |
19,806 |
மூலதனச்செலவினம் |
619,069 |
795,368 |
176,299 |
நிலையான மூலதனச் சொத்துக்கள் கொள்வனவு |
385,366 |
483,543 |
98,177 |
மூலதன மாற்றல்கள் |
239,688 |
307,917 |
68,229 |
நிறுவகங்கள் |
200,172 |
254,384 |
54,212 |
நிதிசாரா பொது தொழில்முயற்சிகள் |
20,704 |
34,365 |
13,661 |
உப தேசிய அரசாங்கங்கள் |
18,812 |
19,168 |
356 |
வெளிநாட்டு |
1,951 |
n/a |
n/a |
செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள் |
- |
- |
- |
ஏனையவை |
-5,985 |
3,907 |
9,892 |
கடன் மறை மீள் கொடுப்பனவுகள் |
-4,933 |
-3,552 |
1,381 |
முற்பணக் கணக்குகள் மூலமாக தேறிய கடன் |
1,172 |
-529 |
-1701 |
பொது தொழில்முயற்சிகள் கடன் |
12,166 |
16,405 |
4,239 |
பொது தொழில்முயற்சிகள் கடன் கொடுப்பனவு |
-18,271 |
-19,429 |
-1,158 |
செலவின மீள் கட்டமைப்பு |
- |
- |
- |
மொத்தம் |
2,915,291 |
3,463,602 |
548,311 |
மூலம்: ஆண்டறிக்கை (2020), இலங்கை மத்திய வங்கி