ஜெனரல்
-
data-chart
இட்டுகம (செய்கடமை) கோவிட் – 19 நிதியத்திலிருந்து அரசாங்கம் 6 சதவீதத்தை மட்டுமே செலவிட்டிருக்கிறது

மார்ச் 23, 2020 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ”இட்டுகம” கோவிட் – 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தை ஆரம்பித்து வைத்தார். ”நாட்டில் கோவிட் – 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூக நலத் திட்டங்கள்” என்பதே இந்த நிதியத்தின் நோக்கம். நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து கிடைக்கும் நன்கொடைகள் மூலம் இதற்கு நிதி வழங்கப்படுகிறது.

நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை மதிப்பிடுவதற்கு ஜனாதிபதி செயலகத்திடம் மார்ச் 15, 2021 வெரிட்டே ரிசேர்ச் தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையைத் தாக்கல் செய்தது. இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக ஜனவரி 31, 2021 இல் நிதியத்தின் மொத்த கணக்கு மீதி ரூ.1,700 மில்லியனுக்கும் அதிகம் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்திருந்தது.

எனினும், இந்தத் தொகையின் 6% (ரூ.105 மில்லியன்) மட்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள்(ரூ.42.6 மில்லியன்), தனிமைப்படுத்தும் வசதிகள் (ரூ.38 மில்லியன்), உதவித் திட்டங்கள் (ரூ.24.4 மில்லியன்) ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டுள்ளன.

2021-05-05
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்