இலங்கையின் தனியாள் வருமான வரி கட்டமைப்பை ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மூன்று முக்கிய கண்டுபிடிப்புக்கள் வெளிப்படுகின்றன. முதலாவது, அதிக வரியில்லா வருமானம் இலங்கையில் காணப்படுகின்றது - அதாவது வரிகள் விதிக்கப்படுவதற்கு முந்தைய குறைந்தபட்ச வருமானம் ஆகும். இரண்டாவது, இலங்கையர்களிடம் உயர் வரி விகிதம் விதிக்கப்படுகின்றது - அதாவது வரி அட்டவணையில் குறைந்த வருமானத்திற்கு அதிகூடிய வருமான வரி வசூலிக்கப்படுகின்றது. மூன்றாவது, இலங்கையின் வரிச்சுமை குறைந்த வருமான மட்டங்களில் ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுகின்றது (மாதாந்தம் ரூ.250,000க்கு குறைவான வருமானம் ஈட்டும் தனிநபர்கள்), ஆனால் அதிக வருமான மட்டங்களில் (ரூ.250,000க்கு மேல்) அதிகமாக உள்ளது.
பின்னணி
தனியாள் வருமான வரி மூலம் சேகரிக்கப்படும் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், 2022 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டத்தின் மூலம் இலங்கை தனது தனியாள் வருமான வரிக் கட்டமைப்பை 2023 ஆம் ஆண்டில் சீர்திருத்தியது. இந்தச் சீர்திருத்தங்களில் வரி செலுத்தத் தேவையற்ற வருமான வரம்பு வருடாந்தம் ரூ.3.0 மில்லியனில் இருந்து (மாதாந்தம் ரூ.250,000) ரூ.1.2 மில்லியன் (மாதாந்தம் ரூ.100,000) ஆகவும், வரி வரம்பு ஆண்டுக்கு ரூ.3.0 மில்லியனில் இருந்து ரூ.500,000 ஆகவும் குறைக்கப்பட்டது. அத்துடன் முன்னர் அதிகபட்சம் 18% ஆக இருந்த வரி விகிதங்கள் 36% வரை உயர்த்தப்பட்டன.
இதன் விளைவாக, தனியாள் வருமான வரி வருமானம் 2022 இல் ரூ.49.5 பில்லியனில் இருந்து கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்து 2023 இல் ரூ.193.5 பில்லியனாக உயர்ந்தது.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தனியாள் வருமான வரி கட்டமைப்பு அட்டவணை 1 இல் காட்டப்பட்டுள்ளது.
அட்டவணை 1: செப்டம்பர் 2024 நிலவரப்படி தனியாள் வருமான வரி அட்டவணை
வருடாந்த வருமானம்
|
மாதாந்த வருமானம்
|
|
||
கீழ் எல்லை |
மேல் எல்லை |
கீழ் எல்லை |
மேல் எல்லை |
வரி விகிதம் (%) |
0 |
1,200,000 |
- |
100,000 |
0% |
1,200,000 |
1,700,000 |
100,000 |
141,667 |
6% |
1,700,000 |
2,200,000 |
141,667 |
183,333 |
12% |
2,200,000 |
2,700,000 |
183,333 |
225,000 |
18% |
2,700,000 |
3,200,000 |
225,000 |
266,667 |
24% |
3,200,000 |
3,700,000 |
266,667 |
308,333 |
30% |
3,700,000 |
|
308,333 |
- |
36% |
மூலம்: இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம், https://www.ird.gov.lk/en/sitepages/default.aspx [இறுதியாக அணுகியது 3 செப்டம்பர் 2024].
இலங்கையின் தாராளமான வரியில்லா வருமான வரம்பு
மாலைத்தீவுகள் தவிர்த்து, தெற்காசியாவிலேயே அதிகூடிய வரியில்லா வருமான வரம்பை இலங்கை கொண்டுள்ளது. வருடாந்தம் ரூ.1.2 மில்லியனுக்கு அதிகமாக (மாதாந்தம் ரூ.100,000) வருமானம் ஈட்டும் வரை பொதுமக்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகின்றார்கள். ஒப்பீட்டளவில், அண்டை நாடுகள் மிகக் குறைந்த வருமான வரம்புகளைக் கொண்டுள்ளன. வரி செலுத்தத் தேவையற்ற மாதாந்த வருமான வரம்பு பங்களாதேஷில் இலங்கை ரூபாய் 75,682க்குச் சமமாகவும், பாகிஸ்தானில் ரூ.54,710க்குச் சமமாகவும் காணப்படுகின்றது. இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இலங்கையை விட சற்றே குறைவான ரூ.91,000 எனும் வரம்பைக் கொண்டுள்ளன. நேபாளம் வரியில்லா வருமான வரம்பு இல்லாத நாடாக தனித்து நிற்கின்றது. குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்குக் கூட 1% வரியை நேபாளம் விதிக்கின்றது. இலங்கையின் தாராள வரியில்லா சலுகை, குறைந்த வருமான மட்டத்தில் உள்ளவர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்களிப்பதுடன், பிராந்தியத்தில் வரி செலுத்துவோருக்கு நட்பான நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றியுள்ளது.
உயர் வரி விகிதத்திற்கான இலங்கையின் துரித ஏற்றம்
ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை அதன் மிக உயர்ந்த வரி விகிதத்தை ஒப்பீட்டளவில் குறைந்த வருமான வரம்பிற்கு விதிக்கின்றது. மாதாந்தம் ரூ.308,333க்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்கள் 36% வரிக்கு உட்படுகின்றனர். இது வருமானத்திற்கு விதிக்கப்படும் அதிகூடிய வரி விகிதமாக இருப்பதுடன், பிராந்தியத்தில் மிக வேகமாக அதன் உயர் வரி வரம்புகளை எட்டிய நாடாக இலங்கையை உருவாக்குகின்றது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா மற்றும் பூட்டான் 30% உயர் வரி விகிதத்தை முறையே ரூ.457,000 மற்றும் ரூ.456,000 என்னும் வருமான மட்டங்களில் விதிக்கின்றன. அதேவேளை பாகிஸ்தானின் 35% என்னும் வரி விகிதம் ரூ.374,000க்கு மேற்பட்ட வருமானத்திற்கு விதிக்கப்படுகின்றது. பங்களாதேஷின் உயர் வரி விகிதமான 25% ஏனைய நாடுகளை விடக் குறைவாக உள்ளதுடன், அது ரூ.357,000க்கு மேற்பட்ட வருமானத்திற்கு விதிக்கப்படுகின்றது. இலங்கையை விட அதிக வரி விகிதத்தைக் கொண்ட ஒரே நாடான நேபாளம், ரூ.950,958க்கு மேற்பட்ட வருமானத்திற்கு 39% வரியை விதிப்பதுடன், அதன் 36% வரி விகிதம் ரூ.381,000க்கு மேற்பட்ட வருமானத்திற்கு விதிக்கப்படுகின்றது — இது இலங்கையின் வரம்பை விட அதிகமாகவே உள்ளது.
குறைந்த மற்றும் அதிக வருமான மட்டங்களில் வரிச்சுமையின் வேறுபாடு
குறைந்த மற்றும் அதிக வருமான மட்டங்களுக்கு இடையில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடக்கூடிய இலங்கையின் தனியாள் வருமான வரிச்சுமையின் தனித்துவமான போக்கை இப்பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. குறைந்த வருமானத்தில், குறிப்பாக மாதாந்தம் ரூ.250,000க்குக் குறைவான வருமானம் ஈட்டுபவர்களுக்கான வரிச்சுமை - வரி செலுத்தப்பட்ட வருமானத்தின் சதவீதமாக அளவிடப்படுகின்றது – ஏனைய தெற்காசிய நாடுகளை விடக் குறைவாக உள்ளது. உதாரணமாக, இலங்கையில் ரூ.150,000 சம்பாதிக்கும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தில் வெறும் 2% ஐ மட்டுமே வரியாகச் செலுத்துகின்றார்கள். அதேவேளை, தெற்காசியாவின் ஏனைய நாடுகள் சராசரியாக 4% ஐ (மாலைத்தீவுகள் உட்பட) செலுத்துகின்றன. எனினும் இந்த வரம்பைத் தாண்டும்போது வரிச்சுமையானது விரைவாக உயர்கின்றது. மாதாந்தம் ரூ.250,000க்கு மேற்பட்ட வருமானத்திற்கு, இலங்கையின் வரிச்சுமை அதன் பிராந்திய நாடுகளை விட மிக வேகமாக அதிகரித்து தெற்காசியாவிலேயே மிக உயர்ந்ததாக மாறுகின்றது. ரூ.500,000 என்னும் வருமான மட்டத்தில், தெற்காசியாவின் சராசரி 15% உடன் ஒப்பிடுகையில், இலங்கையின் வரிச்சுமை 21% என மிக அதிகமாகக் காணப்படுகின்றது. எனினும் இது பாகிஸ்தான் (22%) மற்றும் நேபாளத்தின் (23%) வரிச்சுமைகளை விடக் குறைவாகவே உள்ளது.
இறுதியில், இலங்கையின் தனியாள் வருமான வரி முறைமை ஏனைய தெற்காசிய நாடுகளிலிருந்து தனித்து நிற்கின்றது. ஒருபுறம், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரி செலுத்தத் தேவையற்ற வரம்பை வழங்கி குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்குகின்றது. மறுபுறம், அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மீது, அண்டை நாடுகளை விட மிக விரைவாக அதிக வரிச்சுமையைச் சுமத்துகின்றது.
பகுப்பாய்விற்குப் பயன்படுத்தப்பட்ட முறை பற்றிய குறிப்புக்கள்
1. ஒவ்வொரு தெற்காசிய நாட்டிற்குமான வரி அட்டவணைகள் தொடர்புடைய அரசாங்க வலைத்தளங்கள் மற்றும் PricewaterhouseCoopers (PwC), Orbitax போன்ற பிற நம்பகமான மூலங்களில் இருந்து சேகரிக்கப்பட்டன. (தயவுசெய்து மூலங்கள் பிரிவைப் பார்வையிடவும்)
2. சேகரிக்கப்பட்டதும், நாடுகளுக்கிடையிலான நியாயமான ஒப்பீட்டை உறுதி செய்யும் வகையில் ஜூலை 8, 2024 நாணயமாற்று விகிதத்தைப் பயன்படுத்தி வரி மட்டங்கள் அந்தந்த நாடுகளின் நாணயத்திலிருந்து இலங்கை ரூபாய்க்கு மாற்றப்பட்டன.
3. வருடாந்த வருமானங்கள் 12 ஆல் வகுக்கப்பட்டு மாதாந்தப் பெறுமதிகளாக மாற்றப்பட்டன.
4. தரவுகள் இல்லாத காரணத்தால் ஆப்கானிஸ்தான் இந்தப் பகுப்பாய்வில் உள்ளடக்கப்படவில்லை.
5. மாலைத்தீவின் வரிக்கட்டமைப்பு பொருந்தாமல் தனித்து நிற்பதால் அதுவும் இந்தப் பகுப்பாய்வில் உள்ளடக்கப்படவில்லை. மாலைத்தீவின் வரிக்கட்டமைப்பு வரி செலுத்தத் தேவையற்ற அதிகூடிய வருமான வரம்பைக் கொண்டுள்ளது. MVR 720,000க்கு மேற்பட்ட ஆண்டு வருமானத்திலிருந்தே வரிவிதிப்பு தொடங்குகின்றது. இது இலங்கை ரூபா 14,198,976க்குச் சமமாகும். அத்துடன், மாலைத்தீவு இறைவரி அதிகாரசபையின் தரவுகளின் பிரகாரம், அந்நாடு வருமான வரியில் குறைந்தளவே தங்கியுள்ளதுடன் அதன் மொத்த வருமானத்தில் 1-2% மட்டுமே வருமான வரி மூலம் ஈட்டப்படுகின்றது.
மேலதிக அட்டவணைகள்
அட்டவணை 1: தெற்காசியாவில் வரி செலுத்தத் தேவையற்ற வருமான வரம்புகள் (உள்ளூர் நாணயம் மற்றும் இலங்கை ரூபாய்க்குச் சமமானவை)
நாடு
|
உள்ளூர் நாணயத்தில் வருடாந்த வரியில்லா வருமான வரம்பு
|
உள்ளூர் நாணயத்தில் மாதாந்த வரியில்லா வருமான வரம்பு
|
மாதாந்த வரியில்லா வருமான வரம்புக்குச் சமமான இலங்கை ரூபாய்* |
இலங்கை |
ரூபா1,200,000 |
ரூபா 100,000 |
ரூபா 100,000 |
பங்களாதேஷ் |
BDT 350,000 |
BDT 29,167 |
ரூபா 75,682 |
பாகிஸ்தான் |
PKR 600,000 |
PKR 50,000 |
ரூபா 54,710 |
இந்தியா |
INR 300,000 |
INR 25,000 |
ரூபா 91,310 |
பூட்டான் |
BTN 300,000 |
BTN 25,000 |
ரூபா 91,107 |
நேபாளம் |
0 |
0 |
0 |
மாலைத்தீவு |
MVR 720,000 |
MVR 60,000 |
ரூபா 1,183,248 |
அட்டவணை 2: தெற்காசியாவில் வருடாந்த வரி விகித அட்டவணைகள் (உள்ளூர் நாணயம் மற்றும் இலங்கை ரூபாய்க்குச் சமமானவை)
நாடு
|
வருமானக் குழு (இலங்கை ரூபாய்க்குச் சமமானவை) |
வரி விகிதம் (%) |
|
குறைந்த வருமான வரம்பு |
உயர் வருமான வரம்பு |
||
பங்களாதேஷ் |
0 |
908,180 |
0% |
908,180 |
1,167,660 |
5% |
|
1,167,660 |
1,946,100 |
10% |
|
1,946,100 |
2,984,020 |
15% |
|
2,984,020 |
4,281,420 |
20% |
|
4,281,420 |
|
25% |
|
பாகிஸ்தான் |
0 |
656,520 |
0% |
656,520 |
1,313,040 |
5% |
|
1,313,040 |
2,407,240 |
15% |
|
2,407,240 |
3,501,440 |
25% |
|
3,501,440 |
4,486,220 |
30% |
|
4,486,220 |
|
35% |
|
மாலைத்தீவு |
0 |
14,198,976 |
0% |
14,198,976 |
23,664,960 |
6% |
|
23,664,960 |
35,497,440 |
8% |
|
35,497,440 |
47,329,920 |
12% |
|
47,329,920 |
|
15% |
|
பூட்டான் |
0 |
1,093,287 |
0% |
1,093,287 |
1,457,716 |
10% |
|
1,457,716 |
2,368,789 |
15% |
|
2,368,789 |
3,644,290 |
20% |
|
3,644,290 |
5,466,435 |
25% |
|
5,466,435 |
|
30% |
|
நேபாளம்
|
0 |
1,141,150 |
1% |
1,141,150 |
1,597,610 |
10% |
|
1,597,610 |
2,282,300 |
20% |
|
2,282,300 |
4,564,600 |
30% |
|
4,564,600 |
11,411,500 |
36% |
|
11,411,500 |
0 |
39% |
|
இந்தியா |
0 |
1,095,720 |
0% |
1,095,720 |
2,191,440 |
5% |
|
2,191,440 |
3,287,160 |
10% |
|
3,287,160 |
4,382,880 |
15% |
|
4,382,880 |
5,478,600 |
20% |
|
5,478,600 |
|
30% |
மூலங்கள்