-
2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் முதன்மை மிகையை பதிவு செய்தமைக்கு மாறாக, இலங்கையானது IMF இன் கணிப்புக்கள் மற்றும் எதிர்வு கூறல்களின் படி மீண்டும் முதன்மை பற்றாக்குறையை பதிவு செய்யவுள்ளது. பட்ஜெட் பற்றாக்குறை 2019 ஆம் ஆண்டில் 6% ஐ தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் 8% ஐ அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின் வீழ்ச்சி இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இதன் விளைவாக இலங்கை கடன் தர வரிசைப்படுத்தலில் பின்தள்ளப்படுவதோடு அதன் அரசிறை குறிகாட்டிகள் மோசமான நிலையை அடையும். இது இலங்கையானது வரும் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய, அதன் வெளிவாரி கடன் வட்டிகளின் மீள் செலுத்துகைக்கான நிதியினை, உலகளாவிய சந்தைகளில் பெற முயற்சிக்கும் போது பெரும் பாதகமாக அமையும்.