2025 ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய பலகார மேசையைத் தயாரிப்பதற்கான செலவு முந்தைய ஆண்டை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2019 ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது.
இலங்கையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது வழக்கமாகக் காணப்படும் ஒரு அம்சமான பலகார மேசையில், செழுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் பல பாரம்பரிய இனிப்பு வகைகள் இடம்பிடிக்கும்.
இதிலிருக்கும் எட்டு முக்கிய தின்பண்டங்களில் ஐந்தின் விலைகள் 2025 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், பாற்சோற்றின் விலை 57 சதவீதத்தாலும் கொக்கிஸின் விலை 35 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளன - இவை இரண்டும் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யில் பெரிதும் தங்கியுள்ளன.
பலகார மேசைக்கான விலையில் ஏற்பட்ட ஒட்டுமொத்த அதிகரிப்பானது, தேங்காய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பினாலே முதன்மையாக உந்தப்பட்டது. தேங்காய்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு 80 சதவீதம் உயர்ந்துள்ளதோடு, தேங்காய் எண்ணெய் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, பெரும்பாலான பிற பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன அல்லது நிலையானதாகவே உள்ளன.
மேலும், 2019 உடன் ஒப்பிடும்போது, ஒரு பலகார மேசையின் செலவு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது - 2025 இல் 2.4 மடங்கு அதிகரித்துள்ளதோடு இது 2024 இல் 2.2 மடங்கு அதிகரித்துள்ளது (காட்சி 1 ஐப் பார்க்கவும்).
காட்சி 1: பலகாரங்களின் விலைகளில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றம் (பெறுமதிகள் ரூபாவில்)
தயார் செய்வதற்கான மூலப் பொருட்களின் செலவு |
ஏப்ரல் 2019 |
ஏப்ரல் 2023 |
மார்ச் 2024 |
மார்ச் 2025 |
கொக்கிஸ் (20 துண்டுகள்) |
232 |
529 |
457 |
618 |
வாழைப்பழம் (1kg) |
93 |
283 |
212 |
198 |
பாற்சோறு (10 துண்டுகள்) |
72 |
163 |
165 |
258 |
அலுவா (15 துண்டுகள்) |
124 |
258 |
295 |
249 |
பட்டர் கேக் (1kg) |
370 |
935 |
842 |
754 |
பணியாரம் (20 துண்டுகள்) |
723 |
1483 |
1569 |
1668 |
தொதல் (1kg) |
452 |
976 |
1001 |
1137 |
பயத்தம் பணியாரம் (15 துண்டுகள்) |
221 |
546 |
529 |
531 |
.மூலப்பொருட்களுக்கான மொத்த செலவு |
2,288 |
5,172 |
5,069 |
5,414 |
குறிப்பு
மூலம்:
2019 (ஏப்ரல் வாரம் 1), 2023 (ஏப்ரல் வாரம் 1), 2024 (மார்ச் வாரம் 3) மற்றும் 2025 (மார்ச் வாரம் 3) ஆகியவற்றுக்கான கொழும்பு மாவட்ட திறந்த சந்தையின் வாராந்த சராசரி சில்லறை விலைகள் உட்பட முக்கிய விலைத் தரவுகள் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.
ஆய்வை மேற்கொண்டோர்: ஷலோமி லியனகே மற்றும் அனுஷன் கபிலன்
காட்சிப்படுத்தல்: முஆத் ஹிமாஸ்