-
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக வெரிட்டே ரிசேர்ச் இரண்டு தகவலறியும் உரிமைக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்தது. எனினும் இந்தக் கோரிக்கைகளும் அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடுகளும் எந்தவித நியாயமான காரணங்களும் வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டன.
வரி வருமானங்கள் பொது வளமாகும். ஆனால் கடந்த சில வருடங்களாக இந்தத் தகவல்கள் பொதுமக்களின் கண்களில் காட்டப்படாமல் மறைக்கப்படுகின்றன. தீர்மானங்களை எடுப்பதில் வரித் தரவின் முக்கியத்துவத்தையும் பொதுத் தரவை பகிரங்கப்படுத்துவதில் இலங்கை எதிர்நோக்கும் பின்னடைவையும் இந்த வீடியோவும் விளக்கப்படங்களும் தெளிவுபடுத்தும்.