கடந்த ஐந்து ஆண்டுகளாக (2017-2021) இலங்கைக்கு அதிகளவான இருதரப்புக் கடன்களை வழங்கிய நாடாக சீனா உள்ளது. 2021ம் ஆண்டில் சீனா மொத்தமாக ஐ.அ.டொ 947 மில்லியனைக் கடனாக வழங்கியுள்ளது. அந்தத் தொகையில் ஐ.அ.டொ 809 மில்லியன் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து சந்தைக் கடன்களாகப் பெறப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகூடிய பலதரப்புக் கடன்களை வழங்கியுள்ளது. 2021ம் ஆண்டில் ஐ.அ.டொ 610 மில்லியனைக் கடனாக வழங்கியுள்ளது.
2022ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தமாக ஐ.அ.டொ 968 மில்லியன் கடனாகப் பெறப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் அதிகளவான இருதரப்புக் கடன்களை வழங்கிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியா (ஐ.அ.டொ 377 மில்லியன்) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ஐ.அ.டொ 360 மில்லியன்) ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட கடன்கள், 2022ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் பெறப்பட்ட மொத்தக் கடன்களில் 76 சதவீதமாக உள்ளன.