ஜெனரல்
-
data-chart
வரி அடிப்படையில் ஏற்பட்ட மாற்றம்: 2019 முதல் 2020 வரை பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துனர்களின் எண்ணிக்கையில் 33.5% வீழ்ச்சி

2019 முதல் 2020 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையின் வரி அடிப்படையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துனர்களின் (நிறுவனம் மற்றும் தனிநபர்) எண்ணிக்கையில் 33.5% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக் கொள்கையுடன் தொடர்புடைய முக்கிய மாற்றங்களே இதற்குக் காரணம், பெறுமதி சேர் (VAT) வரிக்கான வரம்பு குறைக்கப்பட்டமை மற்றும் உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE) இல்லாதொழிக்கப்பட்டமை இதற்கான முக்கியமான காரணங்கள் ஆகும்.
 

ஜனவரி 1, 2020 அன்று குடியுரிமையுள்ள அல்லது குடியுரிமையல்லா நபர்களின் சம்பளத்திலிருந்து கட்டாயமாகக் கழிக்கப்படும் உழைக்கும்போது செலுத்தும் வரி அகற்றப்பட்டதுடன், ஏப்ரல் 1, 2020 அன்று விருப்பத்திற்குரிய திட்டமான ‘தனியாள் முற்பண வருமான வரி’ (APIT – Advance Personal Income Tax) மூலம் இது மாற்றியமைக்கப்பட்டது. தனிநபர் வருமான வரிக்கான வரியல்லா வரம்பும் ஆண்டுக்கு ரூ.500,000 என்பதில் இருந்து ஆண்டுக்கு ரூ.3,000,000 என அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கையின் வரி அடிப்படையில் வரி செலுத்துனர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைந்தது.

மேலும் ஜனவரி 1, 2020 அன்று பெறுமதி சேர் வரிக்குப் பதிவுசெய்வதற்கான வரம்பு ஆண்டுக்கு ரூ.12 மில்லியன் என்பதில் இருந்து ஆண்டுக்கு ரூ.300 மில்லியன் என அதிகரிக்கப்பட்டது. அத்துடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இயக்கப்பட்ட சேவைகளுக்கு பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

உழைக்கும்போது செலுத்தும் வரி இல்லாதொழிக்கப்பட்டதால் ஊழியர்களின் ஆண்டு வருமானம் வரியல்லா வரம்புக்கு அதிகமாக இருந்தால் அவர்கள் தனியாக வருமான வரி விபரத்திரட்டைப் பதிவுசெய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 2019 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தனிநபர் வருமான வரிக் கோப்புகளின் அதிகரிப்பு வெறுமனே 11,607 ஆகும். PAYE/APIT ஆகியவற்றுக்குப் பதிவுசெய்த வரி செலுத்துனர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியான 485,055 என்பதுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவாகும்.

2021-12-06
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்