-
நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் நிலையான வட்டி வீதத்தைக் கொண்டுள்ளன. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அவை வழங்கிய கடன்களில் பலவற்றை நிலையான வட்டி வீதத்தில் வழங்கியிருக்கின்றன. அதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கி, இந்தியா, உலக வங்கி ஆகியவை மாறக்கூடிய வட்டி வீதத்தில் கடன்களை வழங்கியிருக்கின்றன.
இந்த முக்கிய நிதியளிப்பு மூலங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களின் எடையிடப்பட்ட சராசரி வட்டி வீதத்தைக் கவனத்தில் கொள்ளும்போது, நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் உயர் வட்டி வீதத்தைக் கொண்டிருக்கின்றன. அதைத் தொடர்ந்து சீனா, இந்தியா மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன்கள் அதிக வட்டி வீதத்தைக் கொண்டிருக்கின்றன. ஜப்பான் குறைந்த வட்டி வீதத்தில் கடன்களை வழங்குகிறது.