2024 ஏப்ரல் மாத இறுதிக்குள், இலங்கை தனது முடிக்கப்பட வேண்டிய உறுதிமொழிகளில், 30% ஐ நிறைவேற்றவில்லை, இது நிறைவேற்றப்படாத மொத்த உறுதிமொழிகளை 19 ஆக மாற்றுகிறது. இந்த நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளில் பெரும்பாலானவை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் சட்டத்தை இயற்றுதல் தொடர்பானவையாகும். இதுவரை நிலுவையில் உள்ள உறுதிமொழிகளின் சுருக்கம் கீழே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது:
வெளிப்படைத்தன்மை/வெளியீட்டுத் தேவைப்பாடுகள் |
சட்டங்களை இயற்றுதல் |
ஏனையவை |
அரை ஆண்டு பொது கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் வரி விலக்கு மதிப்பீடுகளை வெளியிடல் |
பணவீக்கத்திற்கு கலால் வரிகளின் தானியங்கி குறியீட்டை அறிமுகப்படுத்துதல் |
காலக்கெடு மற்றும் இடைநிலை கட்டங்களுடன், VAT திரும்பப்பெறும் முறைமையை உருவாக்குவதற்கான ஒரு மூலோபாயத்திற்கும் SVAT ஐ முழுமையாக ரத்துசெய்யவும் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறல் |
SDP மற்றும் BOI சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வரிச் சலுகைகளின் நேரடிச் செலவுகளை வெளியிடல் |
பொது நிதி முகாமைத்துவ சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் |
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7.5 சதவீதமாக அரசாங்க உத்தரவாதங்கள் மீதான வரம்பை குறைத்தல் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுதல் |
ஆட்சிமுறைமையை கண்டறியும் அறிக்கையில் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான அரசாங்க செயன்முறை திட்டத்தை வெளியிடுதல் |
UNCAC க்கு இணங்கும் வகையில் சொத்துக்களை மீட்பதற்கான சட்டத்தை இயற்றுதல் |
ITMISஐ முழுமையாக செயல்படுத்துதல் |
அனைத்து 52 முக்கிய SOEகளின் 2022க்கான வருடாந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பதை உறுதிசெய்தல் |
கடன் முகாமைத்துவ முகவரகத்தை அமைப்பதற்கு சட்ட மாற்றங்களை மேற்கொள்ளல் |
2023 டிசம்பர் மாதத்திற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீதமான (ரூபா 187 பில்லியன்) சமூக செலவினங்கள் |
ஐந்து SOEகளைத் தவிர மற்ற எல்லாவற்றினதும் கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகளை வெளியிடல் |
|
2024 ஜனவரி மாதம் முதல், சமுர்த்தியின் கீழ் பணப் பரிமாற்றம் நிறுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துதல் |
காலாண்டு கடன் சிற்றேட்டை வெளியிடல் |
|
|
ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கான செயற்படுத்தல் திட்டங்களை வெளியிடுதல் |
|
|
வரி இணக்கத்தின் காலாண்டு KPIகளை அறிமுகப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடல் |
|
|
அரச கணக்குகள் திணைக்களத்தால் மாதாந்த காசுப்பாய்ச்சல் பற்றி அறிக்கையிடல் |
|
|
வங்கித் தொழில் சட்டத்தின் திருத்தங்களைச் செயற்படுத்துதல் |
|
|