இலங்கையின் பொருளாதாரத்தில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOE) தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கியமாக எரிசக்தி, நீர், வங்கி மற்றும் காப்புறுதி, பொதுப் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் போன்ற மூலோபாயத் துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன
தற்போது 287 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் நிதியமைச்சின் பொது நிறுவனங்கள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ளன. மீதமுள்ள நிறுவனங்கள் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் கீழ் உள்ளன. அரசுக்குச் சொந்தமான 52 நிறுவனங்கள் முக்கியமானவையாக நிதியமைச்சின் ஆண்டறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் நிதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் இவை முக்கியமானவை ஆகும். இந்த 52 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் சில இலாபம் ஈட்டும்போதும், மற்றவை நட்டத்தில் இயங்குகின்றன. இதன் மூலம் எதிர்மறையான நிதித் தாக்கங்களை ஏற்படுத்துவதுடன் பேரண்டப் பொருளாதாரத்தில் பாதகமான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன.
இணையத்தில் கிடைக்கும் சமீபத்திய தரவுகளுக்கு அமைய நிதியமைச்சினால் அடையாளம் காணப்பட்ட 52 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் நிதி தொடர்பான தகவல்கள் 2017 ஆண்டறிக்கைக்குப் பின்னர் இணையத்தில் கிடைக்கவில்லை. மேலும் கிடைக்கும் சமீபத்திய தரவின் பிரகாரம் 52 நிறுவனங்களில் 11 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் எதிர்மறை நிறுத்திவைத்த இலாபம்/திரட்டப்பட்ட இழப்புகளைப் பதிவு செய்துள்ளன.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள்
https://www.treasury.gov.lk/api/file/b7d9bbeb-bb97-4d26-b273-5b7df51566ba