சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் பொருளாதார மீளாய்வானது, 2024 ஆம் ஆண்டில், அரச செலவின கூட்டுத்தொகை ரூபா 6,131 பில்லியனாக இருந்ததாக சுட்டிக்காட்டுகிறது. இதில் கிட்டத்தட்ட அரைவாசி - ரூபா 2,690 பில்லியன், அல்லது 44 சதவீதமானது - ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிக் கொடுப்பனவுகளுக்கே செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றில், பெரும்பாலான பகுதி, அன்றாடச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது: சம்பளம் மற்றும் ஊதியங்கள் ரூபா 1,066 பில்லியனாக இருப்பதோடு, ஓய்வூதியங்கள் மற்றும் நலன்புரி மாற்றல்கள் ரூபா 1,234 பில்லியன்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. மூலதன முதலீட்டிற்காக ரூபா 791 பில்லியன் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதோடு, இது கடன் பெறுவனவுகள் எவ்வாறு அபிவிருத்தி செலவினங்களைத் தொடர்ந்தும் கட்டுப்படுத்துகின்றன என்பதை விளக்குகிறது.
வருமானமானது, ரூபா 4,091 பில்லியனை எட்டியுள்ளதோடு, இது மொத்த செலவினத்தில் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்குகின்றது. VAT மற்றும் கலால் வரிகளை உள்ளடக்கிய நுகர்வு வரிகளானவை ரூபா 2,181 பில்லியனை உருவாக்கி, மொத்த வருமானத்தின் அரைவாசிக்கும் மேலாக வசூலின் பெரும் பகுதியை ஈட்டியுள்ளன. வருமான வரிகள் ரூபா 1,026 பில்லியனளவை பங்களித்துள்ளன.
இருப்பினும், திறைசேரியானது, ரூபா 2,041 பில்லியனை பற்றாக்குறையாக பதிவு செய்துள்ளதோடு, அதன் பாதீட்டில் மூன்றில் ஒரு பங்கை நிதியளிப்பதற்கு கடன் பெற்றுள்ளது.
சுருங்கககூறின், கடன்சேவைக் கொடுப்பனவுகள் பெரும்பாலும் செலவினங்களை உட்கொள்வதோடு, நுகர்வு வரிகளே வருமானத்தை ஈட்டுகின்றன. மேலும் கணக்குகளை சமநிலைப்படுத்துவதற்கு கடன் பெறுதல் அவசியமாகின்றது.
மூலம்
மத்தியவங்கியின் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு 2024: https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-economic-review/annual-economic-review-2024 [5 மே 2025 இல் இறுதியாக அணுகப்பட்டது].
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய பொருளாதாரக் கொள்கை நடவடிக்கைகள் (2023): https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/aer/2023/en/major_economic_policy_measures.pdf [16 மே 2025 இல் இறுதியாக அணுகப்பட்டது]