ஜெனரல்
-
data-chart
2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக 987 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக் கடன்களாகவும் மானியங்களாகவும் இலங்கை பெற்றுள்ளது

பெப்ரவரி 2020 முதல் மே 2021 வரையான காலப்பகுதியில் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக  987 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன்களாகவும் மானியங்களாகவும் இலங்கை பெற்றுள்ளது. கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு அதிக நன்கொடை  மற்றும் கடன் வழங்கும் நிறுவனமாக உலக வங்கியே இருந்து வருகிறது.

கூடுதலாக, கோவிட் உதவித் தொகை எனக் குறிப்பிட்டு  500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மார்ச் 19, 2020 அன்று சீனாவிடம் இருந்து இலங்கைக்குக் கிடைத்தது. எனினும், இந்தத் தொகை எந்தக் குறிப்பிட்ட திட்டத்திற்கும் என ஒதுக்கப்படாமல் அந்நிய செலாவணி வீதத்தை வழங்குவதற்கான பொதுவான வரவு செலவுத்திட்ட உதவியாகக் கருதப்பட்டதால் அந்தத் தொகை இதில் உள்ளடக்கப்படவில்லை.

குறிப்பு :

  1.  வழங்கல் (பொருட்கள்) வடிவத்தில் பெறப்பட்ட நன்கொடைகள் புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை.
  2. இந்த புள்ளிவிவரங்கள் பொது வலைத்தளங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு மூலங்களில் இருந்து பெறப்பட்டன. எனவே, குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களை மாத்திரம் இலங்கை பெற்ற கடன் மற்றும் மானியமாக கருத முடியாது.

மூலங்கள் :

கடன்கள்

திகதி

அமைப்பு

நோக்கம்

தொகை

(அமெரிக்க டொலர் மில்லியன்)

மூலம்

இணைப்பு

02/2020

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)

நாட்டில் COVID-19 பெருந்தொற்று பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் பதில் முயற்சிகளுக்கு நிதியளித்தல்

15

ADB.org

https://www.adb.org/news/sri-lanka-inaugurates-new-adb-funded-covid-19-testing-laboratory

1/04/2020

புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி

(IBRD)

 அவசரகால பதில் நடவடிக்கைகளை அதிகரித்தல், சுகாதாரத் துறையை வலுப்படுத்துதல், தொற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

35

உலக வங்கி

https://www.worldbank.org/en/news/press-release/2020/04/01/world-bank-fast-track-support-covid19-corona

1/04/2020

சர்வதேச மேம்பாட்டு சங்கம் (IDA)

கோவிட் -19 அவசரகால நிலைமையைக் கையாள்தல் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை திட்டம் – அவசரகால பதில் நடவடிக்கைகளை அதிகரித்தல்

93.6

உலக வங்கி

https://www.worldbank.org/en/news/press-release/2020/04/01/world-bank-fast-track-support-covid19-corona

4/04/2020

IBRD

கோவிட் -19 அவசரகால நிலைமையைக் கையாள்தல் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை

0.0875

நிதி அமைச்சின் ஆண்டறிக்கை (MOF AR) 2020

https://www.treasury.gov.lk/api/file/34f58287-a5ab-47b6-821a-c31ebcaffd8b

4/04/2020

IDA

கோவிட் -19 அவசரகால நிலைமையைக் கையாள்தல் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை திட்டம்

0.23

MOF AR 2020

https://www.treasury.gov.lk/api/file/34f58287-a5ab-47b6-821a-c31ebcaffd8b

24/04/2020

IDA

கோவிட் -19 அவசரகால நிலைமையைக் கையாள்தல் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை திட்டம்

22

MOF AR 2020

https://www.treasury.gov.lk/api/file/34f58287-a5ab-47b6-821a-c31ebcaffd8b

6/05/2020

ADB

மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அரச மருந்துகள் கூட்டுத்தாபனத்திற்கான (SPC) கடன்

25

ADB

https://www.adb.org/news/adb-s-trade-finance-program-supports-medical-supplies-combat-pandemic-sri-lanka

21/05/2020

IDA

கோவிட் -19 அவசரகால நிலைமையைக் கையாள்தல் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை திட்டம்

0.506

MOF AR 2020

https://www.treasury.gov.lk/api/file/34f58287-a5ab-47b6-821a-c31ebcaffd8b

31/05/2020

சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம்

இலங்கையின் வர்த்தக வங்கியானது, கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

50

Economy Next

https://economynext.com

9/06/2020

IDA

கோவிட் -19 அவசரகால நிலைமையைக் கையாள்தல் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை திட்டம்

7.5

MOF AR 2020

https://www.treasury.gov.lk/api/file/34f58287-a5ab-47b6-821a-c31ebcaffd8b

12/06/2020

IDA
 
கோவிட் -19 அவசரகால நிலைமையைக் கையாள்தல் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை திட்டம்

22

MOF AR 2020

https://www.treasury.gov.lk/api/file/34f58287-a5ab-47b6-821a-c31ebcaffd8b

22/06/2020

IDA

கோவிட் -19 அவசரகால நிலைமையைக் கையாள்தல் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை திட்டம் (கூடுதல் நிதியளிப்பு)

87

உலக வங்கி

https://projects.worldbank.org/en/projects-operations/project-detail/P174291

21/07/2020

IDA

கோவிட் -19 அவசரகால நிலைமையைக் கையாள்தல் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை திட்டம்

0.732

MOF AR 2020

https://www.treasury.gov.lk/api/file/34f58287-a5ab-47b6-821a-c31ebcaffd8b

24/07/2020

IDA

கோவிட் -19 அவசரகால நிலைமையைக் கையாள்தல் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை திட்டத்திற்கான கூடுதல் நிதியளிப்பு

0.104

MOF AR 2020

https://www.treasury.gov.lk/api/file/34f58287-a5ab-47b6-821a-c31ebcaffd8b

14/10/2020

IDA

கோவிட் -19 அவசரகால நிலைமையைக் கையாள்தல் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை திட்டம்

0.954

MOF AR 2020

https://www.treasury.gov.lk/api/file/34f58287-a5ab-47b6-821a-c31ebcaffd8b

19/10/2020

IDA

கோவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்புகளின்  தயார்நிலை திட்டத்திற்கான மேலதிக நிதியளிப்பு

18.66

MOF AR 2020

https://www.treasury.gov.lk/api/file/34f58287-a5ab-47b6-821a-c31ebcaffd8b

26/10/2020

IDA

கோவிட் -19 அவசரகால நிலைமையைக் கையாள்தல் மற்றும் சுகாதார அமைப்புகளின் தயார்நிலை திட்டத்திற்கான கூடுதல் நிதியளிப்பு

0.136

10.199

MOF AR 2020

https://www.treasury.gov.lk/api/file/34f58287-a5ab-47b6-821a-c31ebcaffd8b

25/11/2020

ADB

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான உடனடி நிதி உதவி மற்றும்  பெண்கள் மற்றும் தேயிலை சிறு உரிமையாளர்கள் தலைமையிலான வணிகத்திற்கு  நீண்ட கால நிதி உதவி

165

ADB

https://www.adb.org/news/adb-sri-lanka-sign-loan-agreement-support-smes-affected-covid-19

26/12/2020

ADB

இலங்கை சுமார் 25 மில்லியன் தடுப்பூசிகளை வாங்குவதற்கான கடன்

84

News First

https://www.newsfirst.lk/2020/12/26/adb-approves-loan-to-procure-covid-19-vaccines/

12/1/2021

சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம்

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட இலங்கை வர்த்தகங்களுக்கு அவசியமான செயல்பாட்டு மூலதனத்திற்கான மேம்பட்ட அணுகலை வழங்குதல்

25

IFC

https://pressroom.ifc.org/all/pages/PressDetail.aspx?ID=26154

25/02/2021

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

பாரிய, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தனியார் நிறுவனங்களின் திரவத்தன்மைக்காக அவசர கடன் வழங்கும் தேவை

180

aiib

https://www.aiib.org/en/projects/details/2021/approved/Sri-Lanka-COVID-19-Emergency-and-Crisis-Response-Facility.html

2021-07-29
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்