ஜெனரல்
-
data-chart
இலங்கை துறைமுக அதிகாரசபை - ஒரு இலாபகரமான அரசுக்குச் சொந்தமான நிறுவனம்

2015ம் ஆண்டிலிருந்து இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) செயல்பாட்டு லாபத்தை ஈட்டியது. 2020ம் ஆண்டில் ஒரு சிறிய சரிவைச் சந்தித்தாலும் 2015 முதல் 2019 வரை அதன் வருமானம் தொடர்ந்து வளர்ச்சியைக் கண்டது. 2016ம் ஆண்டு முதல் SLPAயினால் நிகர லாபத்தை ஈட்ட முடிந்தது.

நிகர லாபத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு அந்நிய செலாவணி இழப்பு/லாபம் முக்கிய பங்களிக்கிறது. இது நாணயத்தின் ஏற்ற இறக்கம், வெளிநாட்டுக் கடன்களின் பங்கு ஆகியவற்றின் மூலம் நிகர லாபத்தைப் பாதிக்கிறது. அந்நிய செலாவணி இழப்பு/லாபத்தினால் ஏற்படும் தாக்கம் 2018 தவிர்த்து பிற ஆண்டுகளில் குறைந்துள்ளது.

2017ம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீன வர்த்தகத் துறைமுகங்களுடன் சலுகை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம், துறைமுக அபிவிருத்திக்காகப் பெறப்பட்ட கடன்கள் மற்றும் அவ்வாறான கடன்களின் மீளச்செலுத்தல்கள் SLPA இலிருந்து திறைசேரிக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு ஜூலை 25ம் திகதி இதற்கான அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டது. எனவே, இது SLPA நிதிகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது தெளிவாகிறது. 

2022-05-02
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்