ஜெனரல்
-
data-chart
கடன் மறுசீரமைப்புக்குத் தேவைப்பட்ட சராசரிக் காலம்

ஒரு நாடு அதன் பொதுக்கடன் சுமையைத் தாங்க முடியாத நிலையில் கடன் மறுசீரமைப்பை நாடுகிறது. இது ஒழுங்கான அல்லது ஒழுங்கற்ற தவணை தவறுதல் செயல்முறை மூலம் நிகழலாம்.

ஒரு நாடு கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவறவிடாமல், கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கு அதன் கடன் வழங்குனர்களிடம் ஒப்புதல் கோரிக்கையைப் பெறுவது அல்லது கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான ஒப்புதல் கோரிக்கையைத் தொடர்ந்து கடனைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது ஒழுங்கான தவணை தவறுதல் ஆகும்.

ஒழுங்கற்ற தவணை தவறுதல் என்பது ஒரு நாடு கடன் வழங்குனர்களின் ஒப்புதலைப் பெறத் தவறுவதுடன் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது போவதாகும்.

ஒழுங்கான தவணை தவறுதலின் பின்பு கடனை மறுசீரமைத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒழுங்கற்ற தவணை தவறுதலின் பின்பு கடனை மறுசீரமைத்த நாடுகள், கடனை மறுசீரமைக்க அதிக காலம் எடுத்ததை இந்த விளக்கப்படம் காட்டுகிறது.

2022-06-10
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்